புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு அபராதம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
சின்னசேலம்
கச்சசிராயப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் மேற்பார்வையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், ஜெகதீசன், மகாலிங்கம், வெங்கடேசன், கதிரவன், பிரகாஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு அருகாமையில் புகையிலை பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் 1,400, பொது இடத்தில் புகை பிடித்த நபருக்கு ரூ.100 அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு நலக்கல்வி வழங்கியதோடு, பள்ளிக்கு அருகாமையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.