ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்


ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
x

ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் ரெயில் நிலையம், ராஜாஜி நகர், செந்துறை சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தினர். இதேபோல் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவை இல்லாமல் ஓட்டிய 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதில் பல ஆட்டோக்கள் இன்சூரன்ஸ் எடுக்கப்படாமலும், சிலர் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மேற்கண்ட குறைகளை உடனடியாக சரி செய்து அதன் பிறகு பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.


Next Story