போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களுக்கு அபராதம்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.
பெரம்பலூர்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அணுகு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார்கள் வந்ததின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று கனரக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்களை சந்தித்து இனிவரும் காலங்களில் அணுகு சாலையில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகனங்களுக்கு அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story