ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்
நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தீவிர வாகன சோதனை
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதனை பின்பற்றாக காவலர்கள் மீதும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உத்தரவின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அபராதம் விதிப்பு
அதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி தலைமையிலும், மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தில் வந்தவர்கள் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கான அபராதங்களை ஒருசிலர் போன்பே மூலம் அந்த இடத்திலேயே செலுத்தினர். மேலும் சிலர் அதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அறைக்கு சென்று அபராத தொகையை செலுத்தினர். தொடா்ந்து போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுைர வழங்கினர்.