சாலையில் சுற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


சாலையில் சுற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் சுற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், மார்க்கெட் போன்ற பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுகின்றது. பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகமுள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வேறு சில இடங்களிலும் மாடுகளால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். வருகிற 9-ந் தேதிக்கு பிறகு சாலையில் திரியும் கால்நடைகள் பேரூராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், 3 நாட்களுக்கு கால்நடைகளை மீட்க வராத உரிமையாளர்களின் கால்நடைகள் பொது ஏலம் விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story