பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x

திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட மாட வீதி, சின்னக்கடை தெரு, கடலைக்கடை மூலை சந்திப்பு, காய்கறி மார்க்கெட், போளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன.

இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் நடந்து செல்பவர்கள் மீது மாடுகள் முட்டி விடுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று பள்ளி மாணவியை முட்டியது.

இதனை கருத்தில் கொண்டு கலெக்டர் முருகேஷ் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையிலான சுகாதார ஆய்வாளர் மால்முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது 4 மாடுகளை பிடித்த அவற்றின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடுமையான அபராதம் விதிக்கப்படும்

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், திருவண்ணாமலை நகராட்சிக்கு தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் வருகிறது..

மாடுகளை வளர்ப்பவர்கள் அதற்கென கூடாரம் அமைத்து பராமரிக்க வேண்டும். சாலையில் சுற்றி திரிந்தால் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

மீண்டும் தவறு நடைபெறும் பட்சத்தில் மாடுகளை பிடித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்றார்.


Next Story