சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலை எப்போதும் வாகனங்கள் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
ஆனால் மாலை நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் வந்தன.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் மேற்பார்வையில் ராணிப்பேட்டை, நவல்பூர், மற்றும் முத்துக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 10 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்து ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.
மேலும் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து, தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story