திருட்டு போன மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்சு பணம் தர மறுத்த தனியார் நிறுவனத்துக்கு அபராதம்; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


திருட்டு போன மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்சு பணம் தர மறுத்த தனியார் நிறுவனத்துக்கு அபராதம்; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x

திருட்டு போன மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்சு பணம் தர மறுத்த தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி-தண்டரை பகுதியை சேர்ந்தவர் ரஹத் அகமதுகான் (50). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகம் அருகே கடந்த 6- 2 -2019 அன்று தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்னைக்கு பஸ்சில் சென்றார். 7-2-2019 அன்று மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி கல்பாக்கம் போலீசில் ரஹத் அகமதுகான் புகார் செய்தார். 6 மாதத்திற்கு பி்ன்னர் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லையென்று போலிஸ் தரப்பில் கூறவே இவர் இழப்பீடு கேட்டு இன்சூரன்சு நிறுவனத்தை அணுகினார். அங்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என 16 - 10 -2019 அன்று பதில் கூறவே அந்த இன்சூரன்சு நிறுவனத்தின் மீது செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 16- 12 - 2019 அன்று ரஹத் அகமதுகான் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர் காசிபாண்டியன், உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்துக்கு ரூ. 36 ஆயிரத்து 450-ஐ திருட்டு போனதற்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறிய அன்றைய தினத்தில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story