கெட்டுப்போன இறைச்சி விற்ற கடைக்கு அபராதம்


கெட்டுப்போன இறைச்சி விற்ற கடைக்கு அபராதம்
x

கெட்டுப்போன இறைச்சி விற்ற கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

கெட்டுப்போன இறைச்சி விற்ற கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆரணி நகரில் புதிய பஸ் நிலையம் அருகாமையில் நகராட்சி கடைக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் இறைச்சிக்கடை நடத்தி சிக்கன்பகோடாவும் விற்று வருகிறார். இங்கு கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், சுகாதார ஆய்வாளர் முருகன், சுகாதார களப்பணியாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த பிரீசரில் சுமார் 10 கிலோக்கு மேலாக கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றினை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.



Next Story