புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
x

புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரகசியமாக விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வட்டார சுகாதார ஆய்வாளர் செங்கமலை தலைமையில் ஆய்வாளர்கள் நேரு, சரவணகுமார், அருள்பிரகாஷ் ஆகியோர் கொண்டு குழுவால் 58 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. கோட்டப்பாளையம், பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 16 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூலிக்கப்பட்டது.


Next Story