பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்


பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், சண்முக சுந்தரம், முத்தமிழ், பூபதி ஆகியோரை கொண்ட குழுவினர் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் வசூலித்தனர். வடக்கு வீதி கடைகளில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.1,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.


Next Story