இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டியவருக்கு அபராதம்


இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டியவருக்கு அபராதம்
x

சிவகாசியில் இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததால் கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலையில் சிவகாசி பசுமை மன்றம் தற்போது அந்த கண்மாயை மீட்டு வருகிறது. இதைதொடர்ந்து கண்மாய் பகுதியில் குப்பைகளையும், கழிவுகளை வீசக்கூடாது என்று யூனியன் தலைவர் முத்துலட்சுமி உத்தரவிட்டு அந்த பகுதியில் குப்பைகளையும், கழிவுகளையும் வீசும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க ஆனையூர் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் ஆனையூர் பஞ்சாயத்து செயலர் நாகராஜ் வழக்கமான தனது ஆய்வு பணியில் ஈடுபட்டபோது ஆசாரி காலனியை யொட்டி உள்ள செங்குளம் கண்மாய் பகுதியில் இறைச்சி வியாபாரி ஒருவர் கழிவுகளை கொட்டிவிட்டு சென்றார். அவரை மடக்கி பிடித்த பஞ்சாயத்து ஊழியர்கள் கழிவுகளை மீண்டும் எடுத்து செல்ல வலியுறுத்தினர். பின்னர் கழிவுகளை கண்மாயில் கொட்டியதற்காக ரூ.1,500 அபராதம் வசூலித்தனர்.



Next Story