பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பல இடங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிவகாசியில் உள்ள 3 நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்த சுகாதார பிரிவு அதிகாரிகள் சித்திக், பாண்டியராஜன், பொன்பாண்டி ஆகியோர் கோட்டிங் அட்டைகள், பேப்பர் கப், பிளாஸ்டிக் இலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story