காரின் உரிமையாளருக்கு அபராதம்
காரின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி பீமநகர் யானை கட்டி மைதானம் ரோட்டில் மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளின் வெளியே இருந்த வாகனங்களை அகற்றினார்கள். ஆனால் அனாதையாக ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. இது பற்றி அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார், அந்த காரை பறிமுதல் செய்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த கார் அதே பகுதியை சேர்ந்த சிவகுமாருடையது என்பதும் அவர் வெளியூர் சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை வரவழைத்து அவருக்கு ரூ.1500 அபராதம் விதித்து காரை ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story