நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்


நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பேசியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற வழக்குகளை குறைக்க வேண்டும்.

எனவே நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு நடைபெறகூடாது

குறிப்பாக புகார் அளிக்க வரும் மக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூ்டாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story