கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்


கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை


என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க கோரி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அதன் பொறுப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் காசிநாதன், பொதுச்செயலாளர் முருகன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில், தி.மு.க. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மூடப்பட்ட மயிலாடுதுறை, தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஊதிய நிலுவைத்தொகை 30 மாத பாக்கியை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஓய்வூதியர்கள், வாரிசுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story