பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம்

பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்
அடுக்கம்பாறை
பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார். கவுன்சிலர்கள் கருணாகரன், அண்ணாதுரை, சுபாஷினி லோகநாதன், அண்ணாமலை, சுரேஷ், மாலதிராஜி, லட்சுமி, தமிழரசி, தமிழ்வாணி, ரேகா, ஈஸ்வரிகுமார், வள்ளி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மேட்டுப்பாளையம் -துத்திப்பட்டு இணைப்பு சாலை மற்றும் செங்கல்வராயன் தெருவில் வடிகால்வாய், சிறு பாலங்கள் அமைத்தல், அனைத்து வார்டுகளிலும் புதிய தெரு விளக்குகள் அமைத்தல், பென்னாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர் திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






