ஓய்வூதிய விண்ணப்பத்தை தாமதம் இல்லாமல் பரிந்துரைக்க வேண்டும்


ஓய்வூதிய விண்ணப்பத்தை தாமதம் இல்லாமல் பரிந்துரைக்க வேண்டும்
x

நலிந்த கிராமிய கலைஞர்களுக்கான ஓய்வூதிய விண்ணப்பங்களை தாமதம் இல்லாமல் பரிந்துரைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்


நலிந்த கிராமிய கலைஞர்களுக்கான ஓய்வூதிய விண்ணப்பங்களை தாமதம் இல்லாமல் பரிந்துரைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:-

தமிழ்நாடு அரசு நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு நல உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக இதுவரை மாவட்டத்தில் 2,651 கலைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்கள்

மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் பல முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நலிந்த கிராமிய கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், நலிந்த கிராமிய கலைஞர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பத்தை வருவாய்த்துறையினர் தாமதம் இல்லாமல் பரிசீலித்து பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

10 பேருக்கு விருது

மாவட்ட அளவில் 10 கிராமிய கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என ேகாரினார். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா, நெல்ைல மாவட்ட கலை பண்பாட்டு துறை உதவிஇயக்குனர் சோமசுந்தரம், நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story