அமைப்பு சாரா ெதாழிலாளர்களுக்கு 10-ந்தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்-ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்


அமைப்பு சாரா ெதாழிலாளர்களுக்கு 10-ந்தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும்-ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
x

அமைப்பு சாரா ெதாழிலாளர்களுக்கு 10-ந்தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யூ இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் அய்யாத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் முத்துவிஜயன், லோடுமேன் சங்க மாவட்ட செயலாளர் சுடலைக்காசி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் முரளி, தையல் சங்க மாவட்ட செயலாளர் ஞானசேகர், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும், புதிய பதிவுகளுக்கு சரிபார்ப்பு காலதாமதம் இன்றி ஒப்புதல் வழங்க வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 10-ந் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய நலவாரிய அட்டைகளை தொழிலாளர்களிடம் உரிய முறையில் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், கைத்தறி சங்க மாவட்ட தலைவர் மோதிலால், முறைசாரா சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ், தையல் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story