ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டை 3 நகல்களில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு வருகிற 29-ந்தேிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். பெறப்படும் முறையீடுகளின் மீது குறைகளை அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று நடைபெறும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம் என கடித உறையில் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் செங்கல்பட்டு - 603 001 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.