ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் 16.5.2023(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் கலந்துகொள்ள உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களது குறை தொடர்பான மனுக்களை இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு தெளிவான கையெழுத்திலோ அல்லது தட்டச்சு செய்தோ அனுப்பலாம்.

மனு அனுப்ப வேண்டும்

மனுவில் பெயர் பதவி மற்றும் முகவரி, ஓய்வுபெறும் போது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள் மற்றும் ஆண்டு, ஓய்வூதியம் தொடர்பான குறைகள் விவரம், குறைகள் எந்த அலுவலகத்தில் - அலுவலரிடத்தில் நிலுவை, ஓய்வூதிய கொடுப்பாணை எண் ஆகிய விவரங்களுடன் தங்களின் குறைதொடர்பான மனுக்களை வருகிற 25.4.2023(செவ்வாய்க்கிழமை)-க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

ஏற்கனவே மனுசெய்து நிலுவையில் உள்ளவர்கள். இந்த அலுவலக கடித எண் குறித்து அனுப்புமாறும், மின்சாரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story