ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
சிவகங்கையில் 11-ந் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்கிறது
சிவகங்கை
சிவகங்கை
கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-ந் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விருப்ப உரிமை பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை பலன்கள் தொடர்பான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முன்கூட்டியே அனுப்பி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story