ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் அதன் கிளை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் தனபால், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரியசாமி வரவேற்றார். செயலாளர் அண்ணாமலை வரவு-செலவு கணக்கு மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் பழைய பஸ் நிலையத்தில் பஸ் வந்து செல்லும் நேர பலகை வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஆண்டு சந்தா ரூ.250 உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story