குமரி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது


குமரி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது
x

ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் மாநில அரசு துறை அலுவலகங்கள், அரசு நிதி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பலன்கள் தீர்வு செய்யப்படாமல் இருந்தால் அவ்விவரங்களை இரட்டை பிரதிகளில் மனுவாக வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 28-ந் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஓய்வூதியதாரர் தங்கள் மனுவில் ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய புத்தக எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர், கோரிக்கை நிலுவையில் உள்ள அலுவலகம், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலம் ஆகிய விவரங்களுடன் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் கோரிக்கை மனுக்கள், மாநில அரசு சார்பற்ற துறைகளில் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மின்சார வாரியம், போன்ற கழகம் மற்றும் வாரியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story