ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்


ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந்தேதி நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 27-ந்தேதி காலை 11 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் கலந்து கொள்ள உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களது குறை தொடர்பான மனுக்களை இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை; 609001. என்ற முகவரிக்கு தெளிவான கையெழுத்திலோ அல்லது தட்டச்சு செய்தோ, அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைதொடர்பான மனுக்களை வருகிற 15-ந் க்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே மனு செய்து நிலுவையில் உள்ளவர்கள் இவ்வலுவலக கடித எண் குறித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அதேசமயம், மின்சாரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மற்றும் நூற்பாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


1 More update

Next Story