விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்   அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விழுப்புரம் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் ஓய்வுபெற்ற ஊராட்சி எழுத்தர்கள், ஊர்புற நூலகர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் போன்ற சிறப்பு ஊதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முகமதுகவுஸ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ராஜரத்தினம், மாவட்ட இணை செயலாளர்கள் ரவீந்திரன், லோகநாதன், துணைத்தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ரத்தினம் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட தலைவர் பொன்முடி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர்கள் குமாரதாஸ், திருநாவுக்கரசு, இணை செயலாளர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் வட்ட பொருளாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.


Next Story