பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - ஓய்வூதியர்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையில் அரசு அனைத்து துறை 4-ம் பிரிவு ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வைத்தார். மாநில பொதுச்செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார். 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவு தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story