டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
x

டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை மற்றும் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், பல்லடம் நகரில் தேசிய நெடுஞ்சாலை, கொச்சின் ரோடு இணையும் பகுதியில் செட்டிப்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்து நடக்கிறது. ரோட்டோரம் கடை இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

திறந்த வெளியில் மதுப்பிரியர்கள் கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். பொது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதால் அந்த வழியாக மக்கள் அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

-----------------


Next Story