பகுதி சபை கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 42-வது வார்டுக்கான பகுதி சபை கூட்டம் பானாம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டிய வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷ்ராம் மற்றும் குழுவினர் யாரும் வரவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் புகார் தொிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story