மெரினாவில் தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட இன்றும் நாளையும் மக்களுக்கு அனுமதியில்லை!


மெரினாவில்  தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட இன்றும் நாளையும் மக்களுக்கு அனுமதியில்லை!
x

பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட மக்களுக்கு இன்றும், நாளை முற்பகல் வரை அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை. மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Next Story