இடையாங்குளம்- தாங்கல் சாலையில் மின் கம்பங்கள் அமைத்தும் விளக்குகள் அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதி


இடையாங்குளம்- தாங்கல் சாலையில் மின் கம்பங்கள் அமைத்தும் விளக்குகள் அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
x

இடையாங்குளம்- தாங்கல் சாலையில் மின் விளக்குகள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தாங்கல் மற்றும் இடையாங்குளம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்கள் பழவேற்காடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை பழவேற்காடு ஏரி வழியாக செல்கிறது. இந்த பகுதி பல்வேறு காட்டு விலங்குகளுக்கு புகலிடமாக உள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்லும் இடையாங்குளம்- தாங்கல் சாலையில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின் போது சரிந்து ஏரியில் விழுந்தது. அதன் பின்னர் மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடந்த நிலையில் மின் கம்பிகள் மற்றும் மின் விளக்குகள் இன்னும் அமைக்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து பல முறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த இரு கிராம மக்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் மின் கம்பிகள் மற்றும் மின் விளக்குகள் அமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story