பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

இளம்பிள்ளை அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

இளம்பிள்ளை:-

இளம்பிள்ளை அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி

இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாணவர்களை பள்ளிக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது 1, 4, வகுப்புகள் நடைபெறும் பள்ளியின் வாசல் நுழைவு பகுதி மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது இதைப்பார்த்த பொதுமக்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கோரி இளம்பிள்ளையில் இருந்து காக்காபாளையம் செல்லும் சாலையில் நடுவனேரி ஊராட்சி மன்ற பழைய கட்டிடம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, முத்துசாமி, நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story