குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x

நெல்லை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று ராஜவல்லிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் காலிக்குடங்களுடன் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டவுன் பஸ்சை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உள்ளாட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story