பந்தலூர் அருகே தெருவிளக்குகள் அமைக்கக்கோரி தீப்பந்தங்கள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


பந்தலூர் அருகே தெருவிளக்குகள் அமைக்கக்கோரி தீப்பந்தங்கள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2023 7:15 PM GMT (Updated: 14 Aug 2023 7:15 PM GMT)

பந்தலூர் அருகே தெருவிளக்குகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே தெருவிளக்குகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெருவிளக்கு வசதி இல்லை

பந்தலூர் அருகே உளள இந்திராநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அடர்ந்த வனப்பகுதியை யொட்டி உள்ள இந்தப்பகுதியில் தெருவிளக்குகள் வசதி இல்லை. இதில் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகும் யானைகள் நிற்பது கூட தெரிவதில்லை. மேலும் சிறுத்தைகளும் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் இந்திரா நகர் பகுதியில் தெருவிளக்குகள் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தீப்பந்தங்கள் ஏந்தி...

இதனால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கனை முன்னெடுத்தும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மின்விளக்குகள் இல்லாத மின்கம்பங்களின் கீழ் தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தீப்பந்தங்கள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் செயலாளர் ராசி ரவிக்குமார், நிர்வாகி ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், பந்தலூர் யூனிட் செயலாளர் ஜுனைஸ்பாபு மற்றும் பாபுட்டி, சாஜி, ரெஜிதா உள்பட பலர் கலந்கொண்டனர்.


Next Story