போகி கொண்டாடி தைத் திருநாளை வரவேற்கும் மக்கள் - மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாட்டம்...!


போகி கொண்டாடி தைத் திருநாளை வரவேற்கும் மக்கள் - மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாட்டம்...!
x

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்ரனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை,மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.


Next Story