சொந்த ஊர் திரும்ப பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள்


சொந்த ஊர் திரும்ப பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள்
x

ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஊருக்கு திரும்பியதால் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர்;

ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஊருக்கு திரும்பியதால் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேரோட்டத்தை காண திருவாரூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவாரூருக்கு வந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், நாகை, கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து 44 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொதுமக்கள் கூட்டம்

இந்த பஸ்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது தேரோட்டம் முடிந்து விட்டதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பியதால் திருவாரூர் ரெயில் நிலையம், திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.மேலும் காலியாக வரும் பஸ்களில் இடத்தை பிடிக்க பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு ஏறுவதை பார்க்க முடிந்தது.


Related Tags :
Next Story