அவினாசிலிங்கேசுவரர் கோவில் முன்பு கிராம மக்கள் தர்ணா


அவினாசிலிங்கேசுவரர் கோவில் முன்பு கிராம மக்கள் தர்ணா
x

அவினாசிலிங்கேசுவரர் கோவில் முன்பு கிராம மக்கள் தர்ணா

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் அறங்காவலர் நியமிப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி 2 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அவினாசி லிங்கேசுவரர் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

அவினாசிலிங்கேசுவரர் கோவில்

அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது செல்லத்தக்கது அல்ல என்றும், அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி நேற்றுகாலை அவினாசி அருகே ராயம்பாளையம், புதுப்பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வந்து கோவில் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம். தொடர்ந்து 2 கிராமத்தை சேர்ந்தவர்கள் அறங்காவலராக இருந்து வந்துள்ளோம். இப்போது எங்களை புறக்கணித்துவிட்டு புதிதாக அறங்காவலர்களை நியமித்துள்ளனர். எங்களது இரண்டு ஊர்க்காரர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் கொடுத்த பிறகு தான் வேறு நபருக்கு கொடுக்க வேண்டும். எனவே அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி கொடுத்த பிறகு தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "் தற்போது போடப்பட்டுள்ளதாக கூறப்படும் அறங்காவலர் குழுவை நீக்கிவிட்டு எங்களது இரண்டு ஊர் நபர்களை அறங்காவலர் குழுவில் சேர்க்க வேண்டும் என்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் அலுவலகம் முன்பு கியாஸ் சிலிண்டர் அடுப்பு மூலம் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி கூறிய போது "அரசு உத்தரவு இதுவரை எங்களுக்கு வரவில்லை. பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தால் அதை இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்" என்றார்.

கோவில் முன்பு திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story