திருவாரூரில் இருந்து கப்பலுடையான், அரசமங்கலம், அஸ்கானோடை, அரவூர் வழிதடத்தில் பஸ் வசதிகிராம மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை
திருவாரூரில் இருந்து கப்பலுடையான், அரசமங்கலம், அஸ்கானோடை, அரவூர் வழிதடத்தில் பஸ் வசதி வேண்டும் என கிராம மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசமங்கலம், அஸ்கானோடை, அரவூர், கப்பலுடையான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுடைய கிராமங்களுக்கு முறையான பஸ் வசதி இல்லை. திருவாரூர்-வேடம்பூர் வரை இயக்கப்படும் அரசு பஸ் உரிய நேரத்தில் வருவதில்லை. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள், நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. எங்கள் கிராமத்திற்கு காலை, மாலை 2 வேளை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் செல்லும் பஸ்சை கொரடாச்சேரி, கப்பலுடையான், அரசமங்கலம், அஸ்கானோடை, அரவூர் வழிதடத்தில் இயக்கினால் எங்கள் கிராம மக்கள் பல்வேறு பயன்களை பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.