மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் தரிசனம்


மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தமிழ்மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வந்ததாக அவர்கள் கூறினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தமிழ்மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வந்ததாக அவர்கள் கூறினர்.

ஆராய்ச்சி செய்வதற்காக

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவிலுக்கு நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த 16 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் பஞ்சாட்சர ஹோமம், நவசக்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களை நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது தமிழ்மொழி, கலாச்சாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழகம் வந்துள்ளதாக அவர்கள் கூறினர்.மாயூரநாதர் கோவிலில் மாயூரநாதர் சன்னதி, அபயாம்பிகை சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தனர். அப்போது திருநீறு அணிந்து தரையில் விழுந்து வணங்கி வழிபாடு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம்

தமிழகத்தில் இருந்து ஜப்பான் நாட்டுக்கு சென்று கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் டாக்டர் சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில் டாக்டர் தக்காயுகி ஹோஷி தலைமையில் இந்த குழுவினர் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஜப்பான் தொழிலதிபர்கள் பலர் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். கடந்த ஒருவாரமாக பல்வேறு கோவில்களில் இவர்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story