குன்றத்தூரில் ஏரி மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்


குன்றத்தூரில் ஏரி மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள்
x

குன்றத்தூரில் உயிருடன் கூடிய ஏரி மீன்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

காஞ்சிபுரம்

ஏரி மீன்கள்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அனைவரும் வீட்டில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் மீன்களை விரும்பி சாப்பிடும் நபர்கள், அதனை எங்கு கிடைத்தாலும் அங்கு வாங்க செல்வது வழக்கம்.

குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சிறுகளத்தூர் அருகே சாலை ஓரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து பிடித்து வரப்பட்ட மீன்களை உயிருடன் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனை அசைவ பிரியர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

ெபாதுமக்கள் ஆர்வம்

குறிப்பாக இந்த பகுதியில் ஜிலேபி, கெண்டை, ஏரி வஞ்சரம், தேளி உள்ளிட்ட பல ரக மீன்கள் பெரிய அளவில் கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு கிலோ மீன்கள் ரூ.150 முதல் ரூ.200 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இங்கே விற்கப்படும் மீன்கள் அனைத்தும் உயிருடன் கிடைப்பதால் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஏரிகளில் இருந்து பிடித்து வரக்கூடிய மீன்களை வலைகளில் கட்டி அந்த பகுதியில் செல்லக்கூடிய நீர் வரத்து கால்வாய்களில் போட்டு வைப்பதால் அசைவ பிரியர்கள் தேவைக்கேற்ப மீன்கள் அனைத்தையும் உயிருடன் விற்பனை செய்து வருகின்றனர்.

வாகன நெரிசல்

மீனை எடுத்து தராசில் எடை போடும்போது துள்ளி குதிக்கும் காட்சிகளை காண முடிகிறது. கடலில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு எடுத்து வருவதாலும், கெட்டு போகாமல் இருக்க ரசாயனம் கலப்பதாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் ஏரி மீன்களை அதிக அளவில் வாங்கிச்செல்ல பொதுமக்கள் விரும்புகிறார்கள். இதனால் இங்கு ஏரி மீன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக குன்றத்தூர், சிறுகளத்தூர், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உயிருடன் ஏரி மீன்களை வாங்க இந்த பகுதியில் குவிந்து வருகிறார். அவர்களது இருசக்கர வாகனங்களையும் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் அந்த பகுதியில் வாகன நெரிசலும் ஏற்படுகிறது.


Next Story