கண்மாய் மீன்களை வாங்க குவிந்த மக்கள்


கண்மாய் மீன்களை வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி பகுதியில் கண்மாய் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

கோபால்பட்டி சுற்று வட்டார பகுதிகளான கன்னியாபுரம், விளக்குரோடு, வி.குரும்பப்பட்டி, கணவாய்பட்டி உள்பட பல கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு இந்த கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல கண்மாய்களை குத்தகைக்கு பிடித்து மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். தற்போது கண்மாய்களில் மீன்கள் நன்கு வளர்ச்சி அடைந்தன. நேற்று அவற்றை பிடித்து விற்பனை செய்தனர். இந்த மீன்களை வாங்க சுற்று வட்டார கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். இதில் விறால், கட்லா, பொட்லா, ஜிலேபி ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்கிறது.

இதுகுறித்து மீன்பிரியர்கள் கூறுகையில், கடல் மீன்களைவிட கண்மாய் மீன்கள் அதிக ருசியாக உள்ளது. மேலும் மீன்கள் ஐஸ் வைக்காமல், பிடித்தவுடன் வாங்கி வீட்டில் சமைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர் என்றார்.


Next Story