அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடிப்பண்டிகையையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
அவினாசி
அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் போன்ற பல சிறப்புவாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிமுதல்சாமி தரிசனம் செய்வதற்காக அவினாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், பழங்கரை, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதே போல் அவினாசி கரிவரதராஜப் பெருமாள்கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிப்பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.