மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, ஜூன். 7-

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கி உாிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட அளவில் குழு அமைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தனிமனித மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் பசுமை முதன்மையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.இதில் ஏ.வி.சி கலை- அறிவியல் கல்லூரி மற்றும் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.பின்னர் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக 100 துணிப்பைகள் மற்றும் 100 மரக்கன்றுகளை வழங்கி சுற்றுக்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர.நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன், மாசு கட்டுப்பாடு வாரிய உதவிசெயற்பொறியாளர் தமிழ்ஒளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story