வீடுகள், கடைகளில் தேசியக்கொடியை ஏற்றிய மக்கள்


வீடுகள், கடைகளில் தேசியக்கொடியை ஏற்றிய மக்கள்
x

75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு திருச்சியில் வீடுகள், கடைகளில் மக்கள் தேசியக்கொடியை ஏற்றினார்கள். ஒரு சிலர் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சி

75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு திருச்சியில் வீடுகள், கடைகளில் மக்கள் தேசியக்கொடியை ஏற்றினார்கள். ஒரு சிலர் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேசியக்கொடியை ஏற்றிய மக்கள்

சுதந்திரதின விழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 75-வது ஆண்டு சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் 3 நாட்கள் தொடர்ந்து தேசிய க்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து திருச்சி மாநகராட்சியிலும் பொதுமக்களுக்கு துணியினால் செய்யப்பட்ட தேசியக்கொடி விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று காலை வீட்டின் மாடியில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனும் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதேபோல் பல்வேறு கடைகள், வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. ஒரு சிலர் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்ததை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழிப்புணர்வு தேவை

ஒரு சில இடங்களில் புரிதல் இல்லாமல் தேசியக்கொடியை சாய்வாகவும், வீதிகளில் தோரணம் போலவும் கட்டி தொங்கவிட்டு இருந்ததையும் காண முடிந்தது. சுதந்திரதினத்தை போற்றும் வகையில் தேசியக்கொடியை கட்டி உணர்வை வெளிப்படுத்தும் பொதுமக்களின் செயல் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவர்களுக்கு எவ்வாறு கொடியை கட்ட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story