மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 172 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story