தூய்மை நகருக்கான மக்கள் இயக்க பேரணி
நெகமம் பேரூராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது
கோயம்புத்தூர்
நெகமம்
நெகமம் பேரூராட்சி சார்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி நெகமம் பேரூராட்சி புதிய பஸ் நிலையம் அருகே தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி தலைவர் ஆர்த்தி சபரிகார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
முன்னதாக பேரூராட்சி எழுத்தர் உறுதிமொழி வாசிக்க தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story