ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்தி.மு.க.வின் பொய்யான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்தி.மு.க.வின் பொய்யான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x

தமிழகத்தில் தி.மு.க. அரசின் பொய்யான ஆட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முடிவு கட்ட வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

ஈரோடு

சோலார்

தமிழகத்தில் தி.மு.க. அரசின் பொய்யான ஆட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முடிவு கட்ட வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

வாக்குசேகரிப்பு

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து ஈரோடு பெரியார் நகர் பகுதிக்கு உள்பட்ட பெரியார் நகர் 3-வது வீதி, ராஜாக்காடு மெயின் வீதி, கோவிந்தராஜ் நகர், எஸ்.கே.சி.ரோடு, பெரியார் நகர், 80 அடி சாலை, கருப்பண சாமி வீதி, சிதம்பரம் காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்றும், வாகனம் மூலம் சென்றும் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

முடிவு கட்ட வேண்டும்

அப்போது வாக்காளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 520 வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வாரி இறைத்தனர். அதில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொதுமக்களிடம் வாய் கூசாமல் பெருமை பேசி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வோம். மதுவிலக்கை அமல்படுத்துவோம். குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதியை தந்த தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மூலம் பொதுமக்கள் தி.மு.க.வின் பொய்யான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். எனவே வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி, த.மா.கா.வை சேர்ந்த யுவராஜா, விடியல் சேகர், பா.ஜ.க.வினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story