குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
தரகம்பட்டி அருகே குடிநீர் ேகட்டு காலிக்குடங்களுடன் ெபாதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீர் வினியோகம்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2022-23-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தில் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
இதற்காக சேர்வைகாரன் பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் அதில் தண்ணீர் நிரப்பி பிளாஸ்டிக் குழாய் மூலம் தளிவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
மறியல்
இந்தநிலையில் பிளாஸ்டிக்குழாய் சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தளிவாசல் பகுதி பொதுமக்கள் சேதமடைந்த பிளாஸ்டிக் குழாய்களை உடனடியாக சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் தளிவாசலில் உள்ள கடவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முள்ளிபாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதமடைந்த குழாய்களை அகற்றி, இரும்பு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.