கல்குவாரி, கோழிப்பண்ணையை தடை செய்யக்கோரி கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கல்குவாரி, கோழிப்பண்ணையை தடை செய்யக்கோரி  கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

கல்குவாரி, கோழிப்பண்ணையை தடை செய்யக்கோரி கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை எளையம்பாளையத்தில் சோமசுந்தரம் என்பவரது நிலத்தில் சுமார் 1 லட்சம் கோழிகள் கொண்ட பண்ணை அமைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அருகில் கல்குவாரி ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், தாசில்தார், கலெக்டர், சுகாதாரத்துறை. மாசு கட்டுபாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர். அதில் கோழிப்பண்ணை மற்றும் கல்குவாரிகளால் காற்று மாசு ஏற்படுவதாகவும், இதனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு, குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் மனு குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கோக்கலை எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோக்கலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கோழிப்பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக்கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப்ரமணியனிடம் மனு அளித்தனர். தகவல் அறிந்து சென்ற எலச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியை செய்தனர்.


Next Story