திருத்துறைப்பூண்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்


திருத்துறைப்பூண்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு:  கிராம மக்கள் சாலை மறியல்
x

திருத்துறைப்பூண்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கண்ணன் மேடு பகுதியில் நீர்நிலை புறம்போக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளதாக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் கிராம பகுதிக்குள் நுழையாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் நடுவே அமர்ந்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உதவி கலெக்டர் கீர்த்தனா, தாசில்தார் அலெக்சாண்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே நீர்நிலை புறம்போக்கில் இருந்த 2 வீடுகள் அகற்றப்பட்டன. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story